
கிரியேட்டிவ் மீடியா நெட்வொர்க்கின் 4ஆம் ஆண்டு நிறைவு விழா, விருது வழங்கல் மற்றும் இணையதள அங்குரார்ப்பணம் செப்டம்பர் 13 ஆம் திகதி குருநாகல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிறுவனத்தின் பணிப்பாளர் இஸ்மத் ஹுசைன் ஷாதிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சட்டத்தரணி முகமது அஸ்லம் பிரதம அதிதியாகவும், ஊடகவியலாளர் ஏ.டபிள்யூ.எம். ஃபஸ்லான் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டதுடன், வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மாணவர்களுக்குப் பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இளைஞர்களின் திறமைகளை அங்கீகரித்து ஊக்குவிக்கும் நோக்கிலும், ஊடகத்துறை வழிகாட்டலாகவும் இந்நிகழ்வு வெற்றிகரமாக அமைந்தது.


