BRICS உச்சிமாநாட்டின் இடையே இந்திய – ஈரான் தலைவர்கள் புதுடெல்லியில் சந்திப்பு

புதுடெல்லியில் நடைபெறும் BRICS தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கு இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் (Masoud Pezeshkian) வெள்ளிக்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் மற்றும் பிராந்தியப் பிரச்சினைகளுக்கு மத்தியில் நடைபெற்ற இச்சந்திப்பில், கடல்சார் வழிகளின் பாதுகாப்பு, மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் வர்த்தக விநியோகச் சங்கிலிகளை தடையின்றி பராமரிப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

அனைத்து மோதல்களுக்கும் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர வழிகள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய இந்தியப் பிரதமர், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்காக தொடர்ச்சியான முயற்சிகள் அவசியம் என்றும் தெரிவித்தார்.

(தகவல்: ராய்ட்டர்ஸ்)