பலாங்கொடையில் காணாமல் போன 3 மாணவிகள் திருகோணமலையில் மீட்பு – நடந்தது என்ன?

பலாங்கொடை, பின்னவல – எல்லாராவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயிருந்த நிலையில், அவர்கள் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

பலாங்கொடையில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் இந்த மாணவிகள், பிரத்தியேக வகுப்பிற்குச் (Tuition Class) செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து மாணவிகளின் பெற்றோரால் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், காணாமல் போன மூன்று மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.