
இலங்கையில் உலக வங்கியின் நிதியுதவியுடன் 296 சிறிய குளங்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
‘ஒருங்கிணைந்த கிராமிய-நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலை மீள்தன்மை திட்டத்தின்’ (IRDCRP) கீழ், 2029 வரை முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு 5.8 பில்லியன் ரூபாய்க்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட 18 மாவட்டங்களைச் சேர்ந்த 290 குளங்களை அவசரகால கூறுகளின் கீழ் புனரமைக்க சுமார் ரூ. 5.58 பில்லியன் செலவிடப்படுகிறது.
அதிகபட்சமாக பதுளையில் 97 குளங்களும், இரத்தினபுரியில் 29, மன்னாரில் 24, குருநாகலில் 19 மற்றும் கண்டி, வவுனியாவில் தலா 15 குளங்களும் புனரமைக்கப்படுகின்றன.
மேலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணத்தில் உள்ள 6 குளங்கள் ரூ. 256.2 மில்லியனில் சீரமைக்கப்படுகின்றன.
இது வெள்ளம், வறட்சி போன்ற பாதிப்புகளைத் தணித்து, விவசாயிகளுக்கு உதவும் என கமநல அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.


