நுவரெலியாவில் ரூ. 997 மில்லியன் செலவில் 786 அபிவிருத்தி திட்டங்கள்: ‘பிரஜா சக்தி’ திட்டத்தின்கீழ் நடவடிக்கை

நுவரெலியாவில் ‘பிரஜா சக்தி’ திட்டத்தின்கீழ் 786 அபிவிருத்தி திட்டங்கள்அரசாங்கத்தின் “பிரஜா சக்தி” தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின்கீழ், நுவரெலியா மாவட்டத்தில் 997.84 மில்லியன் ரூபாய் செலவில் 786 அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையில் நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இது தெரிவிக்கப்பட்டது.இதில், 296.19 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் 263 வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்களும், 543.22 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் 286 உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களும் அடங்கும்.2026 வரவு செலவுத் திட்டத்தில் ‘பிரஜா சக்தி’ திட்டத்திற்காக 25 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இதுவரை 22.425 பில்லியன் ரூபாய் பெறுமதியான 15,646 திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிதி ஒழுக்கத்தைப் பேணி இத்திட்டங்களை விரைந்து முடிக்க அமைச்சர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.