
இந்திய மக்களின் பங்களிப்பாக, காலி தேசிய வைத்தியசாலைக்கு 10 நீர் சுத்திகரிப்பு அலகுகள் (Water Purification Units) நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் மைத்ரேய் குல்கர்னி மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள இந்திய துணைத் தூதுவர் ஹர்விந்தர் சிங் ஆகியோர், வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் பிரியந்த அத்தபத்துவிடம் நேற்று (29) இவற்றை உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
இந்த நீர் சுத்திகரிப்பு அலகுகள் வைத்தியசாலை வளாகத்தின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்படவுள்ளன. இதில், வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் நிறுவப்பட்ட முதலாவது அலகு இந் நிகழ்வின்போது திறந்து வைக்கப்பட்டது.தொடர்ந்து, இந்திய தூதுக்குழுவினர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு (ETU) மற்றும் அவசர சிகிச்சை மையம் (ETC) உள்ளிட்ட வசதிகளையும் நேரில் பார்வையிட்டனர்.


