
காசா உதவிக்கப்பல் மீதான தாக்குதல் வழக்கில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கைது செய்ய சர்வதேச இன்டர்போலின் ‘சிவப்பு பிடியாணை’ (Red Notice) பிறப்பிக்கக் கோரவுள்ளதாக துருக்கி அறிவித்துள்ளது.
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் நெதன்யாகு உட்பட 35 பேருக்கு எதிராகத் துருக்கியில் குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர்களை சர்வதேச அளவில் தேடப்படும் நபர்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனினும், துருக்கி ஜனாதிபதி எர்டோகனின் இந்த முயற்சியை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் “பயனற்றது” என நிராகரித்துள்ளது


