நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர் வழங்கும் இலங்கை கடற்படை!

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக இயற்கை நீர்நிலைகள் வற்றியுள்ள நிலையில், அங்குள்ள புகழ்பெற்ற குதிரைகளுக்குக் குடிநீர் வழங்கும் பணியை இலங்கை கடற்படை ஆரம்பித்துள்ளது.

வட கடற்படை கட்டளையின் ‘எஸ்.எல்.என்.எஸ். வசப’ தளம் மூலம், தீவின் மேற்குப் பகுதியான வெள்ளை பகுதியில் ஆகஸ்ட் 21 முதல் இத்திட்டம் தொடங்கப்பட்டது. ‘தூய இலங்கை’ தேசிய திட்டத்தின்கீழ் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் இந்தக் குதிரைகள் நீரின்றித் தவிப்பதைத் தடுக்கவும், தீவு மக்களுக்கு RO ஆலைகள் மூலம் தடையின்றி குடிநீர் வழங்கவும் கடற்படை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.