
கத்தாரில் 3 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலப்பகுதியாக பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள (Impounded) வாகனங்களின் உரிமையாளர்கள், உடனடியாகத் தேவையான நடைமுறைகளை பூர்த்தி செய்து தமது வாகனங்களை மீட்டுச் செல்லுமாறு கத்தார் உள்துறை அமைச்சகத்தின் போக்குவரத்துப் பிரிவு (General Directorate of Traffic) அவசர அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இவ்வறிவித்தலின்படி, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் தொழில்துறை பகுதி (Industrial Area) – வீதி 52 இல் அமைந்துள்ள ‘வாகனப் பறிமுதல் பிரிவுக்கு’ (Vehicle Impoundment Section) நேரில் சென்று, தமக்கான போக்குவரத்துத் தண்டப் பணங்களையும் (Traffic Violations) மற்றும் வாகனப் பராமரிப்புக் கட்டணங்களையும் (Storage Fees) செலுத்தி வாகனங்களை பொறுப்பேற்க வேண்டும்.ஆகஸ்ட் 9, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் இதற்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிமையாளர்கள் வரத் தவறினால், சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


