
பஹ்ரைன் (BAH), ஈராக் (EBL) மற்றும் குவைத் (KWI) ஆகிய இடங்களுக்கான தங்களின் விமான சேவைகள் வரும் ஆகஸ்ட் 8, 2026 முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கத்தார் எயார்வேஸ் (Qatar Airways) நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ‘X’ பக்கத்தில் அறிவித்துள்ளது.முன்னதாக, ஜூலை 22 அன்று இச்சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக கத்தார் எயார்வேஸ் அறிவித்திருந்தது.
அப்போது பஹ்ரைன் மற்றும் எர்பிலுக்கான விமானங்கள் ஜூலை 25 வரையிலும், குவைத்திற்கான விமானங்கள் ஜூலை 31 வரையிலும் இடைநிறுத்தப்பட்டிருந்தன. பின்னர் ஜூலை 30 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், இந்த இடைநிறுத்தம் ஆகஸ்ட் 7 வரை நீட்டிக்கப்பட்டது.
தற்போது விதிக்கப்பட்டிருந்த இடைநிறுத்தக் காலம் முடிவடையும் நிலையில், ஆகஸ்ட் 8 முதல் வழமையான விமான சேவைகள் மீண்டும் இயங்கவுள்ளன.


