SLS சான்றிதழற்ற தலைக்கவசங்களை விற்ற கடை உரிமையாளருக்கு அபராதம்!

SLS 517 தரச்சான்றிதழ் இல்லாத 42 தலைக்கவசங்களை விற்பனை செய்து விநியோகித்த குற்றத்திற்காக வெலிவேரிய பகுதியிலுள்ள கடை உரிமையாளருக்கும் மாக்கோலை விநியோகஸ்தருக்கும் மஹர நீதவான் நீதிமன்றம் தலா 5,000 ரூபாய் வீதம் மொத்தம் 10,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையினரால் கைப்பற்றப்பட்ட இந்த தரமற்ற தலைக்கவசங்களை உடனடியாக அழிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. SLS சான்றிதழற்ற தலைக்கவசங்களை விற்பனை செய்பவர்கள் குறித்து 1977 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.