கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் 7 புதிய ‘லங்கா மெட்ரோ டிரான்சிட்’ பேருந்து சேவைகள் அறிமுகம்!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் வசதியான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில், ‘லங்கா மெட்ரோ டிரான்சிட்’ (Lanka Metro Transit) திட்டத்தின் கீழ் 7 புதிய பேருந்து வீதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்து வீதிகள் விவரம்:
மாகும்புற – புறக்கோட்டை (23.3 கி.மீ)
மில்லேனியம் சிட்டி – கொழும்பு கோட்டை (22.3 கி.மீ)
கடுவேல/கடவத்தை – மாகும்புற (34.8 கி.மீ)
தெமட்டகொட – பாணந்துறை (28.7 கி.மீ)
பத்தரமுல்ல – ஏகல (29.9 கி.மீ)
கொல்லுப்பிட்டி வட்டப் பாதை (Circular Route) (14 கி.மீ)
கெஸ்பேவ – புறக்கோட்டை (35.7 கி.மீ)

இந்த விரிவுபடுத்தப்பட்ட பேருந்து சேவைப் வலைப்பின்னல் மூலம், கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்து இணைப்பு மேம்படுவதோடு, பயணிகளின் பொதுப் போக்குவரத்து அனுபவமும் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.