
தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் தேர்வுகளும் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எனினும், பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பாக வீடுகளுக்குச் செல்லக்கூடிய மாணவர்கள் செல்லலாம் என்றும், செல்ல முடியாதவர்கள் விடுதிகளிலேயே தங்கியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆபத்தான தனியார் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களும் பல்கலைக்கழக விடுதிகளில் தற்காலிகமாகத் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


