600 மில்லியன் சட்டவிரோதச் சொத்துக் குவிப்பு: முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு!

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா 2010-2012 காலப்பகுதியில் தனது சட்டபூர்வ வருமானத்திற்கு அதிகமான வகையில், ரூ. 600 மில்லியனுக்கும் அதிக சொத்துகளைக் குவித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு (CIABOC) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இவ்வழக்கு ஆகஸ்ட் 20 அன்று நீதிபதி மொஹமட் மிஹைல் முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது. இதன் போது பல வங்கி முகாமையாளர்கள் சாட்சியமளிக்க உள்ளனர்.ரூ. 182 மில்லியன் நிலையான வைப்புகள், நிலச் சொத்துகள், 7 ஆடம்பர வாகனங்கள் மற்றும் காப்புறுதி முதலீடுகள் உள்ளிட்ட ரூ. 485 மில்லியன் மதிப்பிலான விளக்கமளிக்க முடியாத சொத்துகளை அவர் எவ்வாறு சேர்த்தார் என்பதை அரசு தரப்பு நிரூபிக்கவுள்ளது.

இருப்பினும், இவை நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.