சிறைச்சாலை சம்பவம்: நாடாளுமன்றத்தில் கறுப்புப் பட்டை அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கருப்பு பட்டை அணிந்து நாடாளுமன்ற சபைக்குள் பிரவேசித்துள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 6-ஆம் திகதி இடம்பெற்ற மோதலில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.