
பஹ்ரைனில் உள்ள ஷேக் இசா (Sheikh Isa) விமானப்படை தளத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள் மீது, ஈரான் இராணுவம் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானின் தெற்குப் பகுதிகளில் அமெரிக்கா முன்னெடுத்த இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ஈரானிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவுடனான போர்நிறுத்தத்தை மீண்டும் மீண்டும் மீறியதும், அதை முறித்ததும் குற்றமாகும். பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்கத் தளங்களும் இனி ஈரானின் இராணுவ ஆளில்லா விமானங்களுக்கு நியாயமான இலக்குகளாக இருக்கும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஹோர்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) ஈரானுக்குள் 80-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியது. இதற்குப் பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள 85 அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) தெரிவித்துள்ளது.இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் வான்வெளி பாதுகாப்பு எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன.
பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


