5 நாட்களில் ரூ. 2500 கோடி வசூல்! உலகையே அதிரவைக்கும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்.

பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக வெளியாகி உலக அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. சிறுவயது முதல் இசையில் சாதனை படைத்த ஜாக்சன், தனது பாடல்கள் மூலம் நிறவெறி மற்றும் காவல்துறை வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். 13 கிராமி விருதுகள் உட்பட எண்ணற்ற விருதுகளை வென்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இவரது வாழ்க்கை, இசை ரசிகர்களுக்கு ஒரு பெரும் உத்வேகமாகும்.

ஆண்டோயின் புகுவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், மைக்கேல் ஜாக்சனாக அவரது அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் நடித்துள்ளார். ஜாக்சனின் உருவ ஒற்றுமை மற்றும் நடன அசைவுகளை ஜாபர் அப்படியே திரையில் பிரதிபலித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘கிளாடியேட்டர்’ புகழ் ஜான் லோகன் திரைக்கதை அமைத்துள்ள இப்படம், வெளியான முதல் நாளிலிருந்தே வசூல் வேட்டையைத் தொடங்கியது.

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், முதல் ஐந்து நாட்களிலேயே சுமார் ரூ. 2500 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஜாக்சனின் இசைப் பயணம் மட்டுமின்றி, அவர் சந்தித்த தனிப்பட்ட சவால்களையும் இப்படம் நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளதால், திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மைக்கேல் ஜாக்சன் மறைந்தாலும், அவரது புகழ் இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை உலகளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.