ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியேறுவதால் எண்ணெய் விலை குறையும்: ரஷ்யா கணிப்பு!

ஐக்கிய அரபு அமீரகம் ஒபெக் (OPEC) அமைப்பிலிருந்து வெளியேறுவதால் உலக சந்தையில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்து, கச்சா எண்ணெய் விலை குறையும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த ரஷ்ய நிதி அமைச்சர் அன்டன் சிலுவானோவ், அமீரகத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து எண்ணெய் உற்பத்தி நாடுகள் தமக்கிடையே ஒருங்கிணைப்பின்றிச் செயல்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு நாடும் தங்களின் முழு உற்பத்தித் திறனைப் பயன்படுத்தி தன்னிச்சையாக கச்சா எண்ணெயை உற்பத்தி செய்ய முற்படும் போது, சந்தையில் அதன் வழங்கல் அதிகரித்து விலை தானாகவே வீழ்ச்சியடையும் என அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச சந்தையில் எண்ணெய்ப் விலையைச் சீராக வைத்திருக்க ஒபெக் அமைப்பு உற்பத்தி கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், அமீரகத்தின் இந்த முடிவு உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.