
இலங்கை தபால் திணைக்களத்தின் கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர் – III ஆம் தரத்தின் அஞ்சல் சேவை அலுவலர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட 326 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (28) முற்பகல் தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை தபால் திணைக்களத்தின் 600 அஞ்சல் சேவை அலுவலர் பதவிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்ததுடன், கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதிகளைப் பூர்த்தி செய்த 326 பேருக்கு இவ்வாறு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இன்று நியமனம் பெற்ற இந்த அலுவலர்கள், மாவட்ட மட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு தபால் திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இவர்கள் மாகாண மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள தபால் பயிற்சி நிறுவனங்களில் இரண்டு வார கால விசேட பயிற்சிகளைப் பெற்ற பின்னர், உரிய கடமைகளுக்காக அந்தந்த தபால் நிலையங்களுக்கு இணைப்பதற்கும் அந்த திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
அரச சேவையில் ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படும் போது எந்தவித அரசியல் தலையீடுகளும் இல்லை என்பதையும், அதற்காக அமைச்சரின் எவ்விதமான பெயர்பட்டியலும் வழங்கப்படவில்லை என்பதையும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே இந்த ஆட்சேர்ப்புக்கள் நடைபெறுகின்றன என்பதையும் இங்கு வலியுறுத்தினேன்.
இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் தீபா லியனகே, தபால் மா அதிபர் ருவன் சத்குமார, பிரதி தபால் மா அதிபர்களான எச்.எம். பிரேமசந்திர ஹேரத், துசித ஹுலங்கமுவ, சமீஷா த சில்வா மற்றும் மாகாண பிரதி தபால் மா அதிபர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


