
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் விஸ்வரூப தரிசனம் செய்தார். கடலில் இறங்கி வழிபாடு செய்த அவர், மலர்கள் சாற்றி முருகனை வழிபட்டார்.
கோயிலில் விஜய்க்கு திரிசுதந்திரர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். அதிகாலையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எதிரிகளை வீழ்த்தி தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைய வேண்டி, தமிழக வெற்றி கழகம் சார்பில், திருச்செந்துார் முருகன் கோவிலில் இன்று சத்ரு சம்ஹார யாகம் நடத்தப்பட்டது.


