இலங்கையின் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: NBRO அறிவிப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, 10 மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கைகள் இன்று (28) பிற்பகல் 4 மணி முதல் நாளை (29) பிற்பகல் 4 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கொழும்பு மற்றும் காலி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கும் முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்யும் மழையைக் கருத்திற்கொண்டு, மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.