பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமியக் கல்லூரியில் கணினிகள் கையளிக்கும் நிகழ்வு!

பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமியக் கல்லூரியில் கணினிகள் கையளிக்கும் நிகழ்வு 2026 ஒக்டோபர் 26ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது.

கௌரவ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M. S. அப்துல் வாஸித் அவர்களின் ரூ. 250,000.00 நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட கணினிகள் இந்நிகழ்வின் ஊடாகக் கையளிக்கப்பட்டன.

இத்தொழில்நுட்ப வசதியானது மாணவர்களின் கற்பித்தல் மற்றும் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும், கல்லூரியின் கல்வி வசதிகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் மஹாஸினுல் உலூம் இஸ்லாமியக் கல்லூரியில் அதிபர் சாஜித் ஹூசைன் மெளலவி, தலைவர் ஆதம்பாவா, பாலமுனை ஜூம்மா பள்ளிவாயல் தலைவர் MA. அன்சார்,

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ A. S. M. உவைஸ் மற்றும் முன்னாள் உதவி தவிசாளர் SMM. ஹனிபா, சமூக செயற்பாட்டாளரும் முகாமைத்துவ உத்தியோகத்தருமான A. L. M. றனீஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.