இலங்கை முழுவதும் எரிவாயு விநியோகத்தைத் துரிதப்படுத்தும் லிட்ரோ!

இலங்கை முழுவதும் தடையற்ற சமையல் எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், விநியோக நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி வருவதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 3,900 மெட்ரிக் தொன் திரவப் பெற்றோலிய எரிவாயுவை ஏற்றிவந்த FRANCOIS கப்பல் கடந்த ஒக்டோபர் 18ஆம் திகதி இலங்கையை வந்தடைந்துள்ளது. தற்போது எரிவாயுவை இறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும், 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிவரும் CORINTHIAN கப்பல் எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.

இந்தக் கப்பல் சரக்குகள் மூலம் நாட்டில் எரிவாயு விநியோகத்தைச் சீராகப் பேணுவதுடன், தட்டுப்பாடின்றி சந்தைக்கு எரிவாயுவை வழங்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.