முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியான வினாரி லக்மந்தி ஹெட்டியாராச்சி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.தனது கணவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை இடைநிறுத்தப்பட்ட (ஒத்திவைக்கப்பட்ட) சிறைத் தண்டனையாக மாற்றுமாறு நீதிபதியைத் தூண்டும் நோக்கில், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் அலுவலகப் பணியாளர் ஒருவருக்கு இலஞ்சம் வழங்கியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்ட புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஆணைக்குழுவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். இக்கைது சம்பவம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.