
புனருதயே புரவர “புத்துயிர்க்கும் புது நகரம்” உள்ளுராட்சி வாரம் – 2026 நிகழ்வுகளில் ஊடகச் செயற்பாடுகளை முன்னெடுத்தமைக்காக, காத்தான்குடி நகரசபையினால் நேற்று வியாழக்கிழமை (24) ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்ற இறுதி நிகழ்வில் ஸ்கைத் தமிழ் ஊடகத்தின் செய்தி முகாமையாளர் ஊடகவியலாளர் எம்.பஹத் ஜுனைட் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த கௌரவத்தினை வழங்கிய காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் அவர்களுக்கும், செயலாளர் திருமதி றினோசா முப்லிஹ் அவர்களுக்கும் எமது ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.


