
அரச நிறுவனங்களில் நிறுவப்பட்ட 244 உள்ளக விவகாரப் பிரிவுகளுக்கான தாபன ஒழுக்க விதிக்கோவையைத் தயாரிப்பது தொடர்பான ஒரு நாள் செயலமர்வு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
நேர்மை மேம்பாட்டு பணியகத்தின் தலைவரும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளருமான சந்திமா விக்கிரமசிங்க மற்றும் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கே. பிரசன்ன சந்தித் ஆகியோர் வளவாளர்களாகப் பங்கேற்ற இச்செயலமர்வில், அரச திணைக்களங்கள், நியதிச்சபைகள் மற்றும் மாகாண அமைச்சுகளின் உள்ளக விவகாரப் பிரிவுத் தலைவர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மேலும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த அரச அதிகாரிகள் இணையவழியினூடாகவும் இதில் இணைந்துகொண்டனர்.


