
நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்ய 3 முக்கிய வழிகளில் சுகாதாரத் துறை வலுப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலவச சுகாதாரத்தை விரிவுபடுத்துதல், நவீன மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் முறையான முகாமைத்துவத்தை ஸ்தாபித்தல் என்பனவே அவையாகும்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் JICA நிறுவனத்தின் 3,545 மில்லியன் ரூபா கடன் உதவியில் 8 மாடிகளுடன் அமையவுள்ள புதிய இருதய சிகிச்சைத் தொகுதியின் நிர்மாணப் பணிகளை நேற்று (செப்டம்பர் 16) ஆரம்பித்து வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.
இதில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICU), கெதீட்டர் ஆய்வகங்கள், எக்ஸ்ரே, ஈ.சி.ஜி உள்ளிட்ட அதிநவீன வசதிகள் அமையவுள்ளதுடன், பிரதேச மக்கள் இலவசமாகச் சிகிச்சைகளைப் பெறமுடியும்.


