செப்டம்பரில் விரிவுபடுத்தப்பட்ட கொழும்பு மெட்ரோ டிரான்சிட் பேருந்து சேவை ஆரம்பம்; வழித்தட வரைபடத்தை வெளியிட்டார் அமைச்சர்

இலங்கையின் கொழும்பு மெட்ரோ டிரான்சிட் பேருந்து சேவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் முழுமையாக இயங்கும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இதற்கான திட்டமிடப்பட்ட வழித்தட வரைபடத்தை அமைச்சர் வெளியிட்டுள்ளதுடன், கொழும்பைச் சுற்றியுள்ள முக்கிய புறநகர் பகுதிகள் மற்றும் போக்குவரத்து மையங்களை இணைக்கும் வகையில் இந்த சேவை திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, மக்கும்புர, மில்லேனியம் சிட்டி, கடவத்தை, பாணந்துறை, ஏகல மற்றும் கெஸ்பேவ உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து சேவைகள் இயக்கப்படவுள்ளன.மேலும், கொள்ளுப்பிட்டியை மையமாகக் கொண்ட சுற்றுவட்டார பேருந்து சேவையும் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் நோக்கில், நவீன பேருந்து சேவைகளைக் கொண்ட வலையமைப்பாக மெட்ரோ டிரான்சிட் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.