
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைக் காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கி ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.
1-வது டெஸ்ட் (ஆகஸ்ட் 15 – 19): காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியை ரசிகர்கள் 4-ஆம் நுழைவாயில் வழியாக இலவசமாகச் சென்று பார்வையிடலாம்.
2-வது டெஸ்ட் (ஆகஸ்ட் 23 – 27): கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியை 3, 4, 5 மற்றும் 7 ஆகிய நுழைவாயில்கள் வழியாக இலவசமாக அணுகலாம்.


