
இஸட்.ஏ.றஹ்மான்
(ஒலுவில் விசேட செய்தியாளர்)
ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் பைத்துல் மால் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மூன்றாம் நிலை மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழு (TVEC) மூலமாக தேசிய தொழிற்திறன் தகுதி (NVQ) சான்றிதழ் கற்கைநெறிகளுக்கான மாணவர் அனுமதி தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு 2026.01.27 ஆம் திகதி மாலை 5 மணியளவில் ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பல மாணவர்கள், மூன்றாம் நிலை மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழு விரிவுரையாளர்கள் மற்றும் பைத்துல் மால் உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


