
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு-20 (T20I) தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாம் இன்று (28) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக நடைபெறும் மிக முக்கியமான தொடராக இது பார்க்கப்படுகிறது. அனுபவ வீரர் தசூன் ஷானக இந்த அணிக்குத் தலைமை தாங்குகிறார்.அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணி குழாம்:தசூன் ஷானக (தலைவர்)பெதும் நிஸ்ஸங்ககமில் மிஷாரகுசல் மெண்டிஸ்குசல் ஜனித் பெரேராதனஞ்சய டி சில்வாசரித் அசலங்கஜனித் லியனகேபவன் ரத்நாயக்கவனிந்து ஹசரங்கதுனித் வெல்லாலகேமஹீஷ் தீக்ஷனதுஷ்மன்த சமீரமதீஷ பத்திரணபிரமோத் மதுஷான்எஷான் மாலிங்கதொடர் விபரங்கள்:இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இந்த மூன்று போட்டிகளும் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.1வது டி20 போட்டி: ஜனவரி 302வது டி20 போட்டி: பிப்ரவரி 013வது டி20 போட்டி: பிப்ரவரி 03ஏற்கனவே நடந்து முடிந்த ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில், டி20 தொடரை வென்று பதிலடி கொடுக்கும் முனைப்பில் இலங்கை அணி களம் காணவுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர மற்றும் மதீஷ பத்திரண ஆகியோரின் வருகை அணியின் பலத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


