16,000 அமேசான் ஊழியர்கள் பணிநீக்கம் – AI வளர்ச்சியால் ஊழியர்களுக்குப் பாதிப்பு!

உலகளாவிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் (Amazon), மீண்டும் சுமார் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், நிறுவனங்கள் தங்களது செலவினங்களைக் குறைத்து, ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.கடந்த மூன்று மாதங்களில் அமேசான் மேற்கொள்ளும் இரண்டாவது மிகப்பெரிய பணிநீக்கம் இதுவாகும். இது குறித்து நிறுவனத்தின் துணைத் தலைவர் பெத் கலேட்டி கூறுகையில், “அமைப்பியல் மாற்றங்கள் காரணமாக இந்த கடினமான முடிவை எடுத்துள்ளோம்; பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவோம்,” எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 14,000 பதவிகளைக் குறைக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 16,000 பேர் பாதிக்கப்படவுள்ளது தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.