
இளையோர் உலகக் கிண்ண தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் சிக்ஸ் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இரண்டு குழுக்களாக நடைபெறும் சூப்பர் சிக்ஸின் குரூப் 1 இல் இலங்கை விளையாடி வருகிறது. இந்தக் குழுவில் அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகியவையும் அடங்கும். இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், நியூசிலாந்து மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் குரூப் 2 இல் உள்ளன.


