ஃபிஃபா அரபு கோப்பை இறுதிப்போட்டியில் கத்தார் அரசர் பங்கேற்பு

தோஹா: கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஃபிபா அரபு கோப்பை 2025 கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில், ஜோர்டான் அணியை வீழ்த்தி மொராக்கோ சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட நிறைவு விழாவில் கத்தார் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இப் போட்டி வியாழக்கிழமை மாலை (18) லுசைல் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மொராக்கோ மற்றும் ஜோர்டான் அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் மொராக்கோ அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஜோர்டானை வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் மொராக்கோ முன்னிலை பெற்றாலும், ஜோர்டான் அணி கடும் போராட்டத்தை அளித்தது. இறுதியில் கூடுதல் நேரத்தில் மொராக்கோ வெற்றி இலக்கை எட்டியது.

வெற்றி பெற்ற மொராக்கோ அணி வீரர்களுக்கு கத்தார் அரசர் சாம்பியன் கோப்பையை வழங்கி கௌரவித்தார்.

இதன் மூலம் மொராக்கோ அணி தனது இரண்டாவது அரபு கோப்பை பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. முன்னதாக 2012-ம் ஆண்டு மொராக்கோ சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜோர்டான் அணி தோல்வியுற்ற போதிலும், முதல்முறையாக இறுதிப்போட்டி வரை முன்னேறியது ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

மேலும், பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் இந்த கண்கவர் நிறைவு விழாவைக் கண்டு ரசித்தனர்.