உலக செஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்து 13 வயது இலங்கை வீராங்கனை வரலாற்று சாதனை

இலங்கையின் இளம் செஸ் நட்சத்திரமான ஓஷினி தேவிந்தியா குணவர்தன, 13 வயதின் கீழ் பெண்கள் செஸ் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து வரலாறு படைத்துள்ளார்.

இதன் மூலம் உலக செஸ் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த இலங்கையின் முதலாவது வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

இரத்தினபுரி பெர்குசன் கல்லூரியில் செஸ் விளையாட்டில் காலடிவைத்த ஓஷினி, தற்போது கொழும்பு விச்சார்லி சர்வதேச பாடசாலையில் கல்வி பயின்று வருகிறார். 13 வயதை அடைவதற்கு முன்பே அவர் இலங்கையின் தேசிய செஸ் சம்பியனானார். அதேபோல, இலங்கையின் இளம் வயது குஐனுநு மாஸ்டர் செஸ் வீராங்கனையான அவர், இலங்கையின் இளம் வயது இன்டர்நேஷனல் மாஸ்டர் செஸ் வீராங்கனையும் ஆனார்.

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக இளையோர் செஸ் சம்பியன்ஷிப்பில் 12 வயதுக்குட்பட்ட இளையோர் உலக செஸ் சாம்பியனானவரும் ஒஷினி தேவிந்தியா தான். சமீபத்திய தரவரிசைப்படி ஒஷினி பெற்றுள்ள புள்ளிகள் 2272 ஆகும்.

13 வயதுக்குட்பட்ட பிரிவில் ஓஷினி முதலிடத்தைப் பிடித்ததோடு மட்டுமல்லாமல், உலக கனிஷ்ட பெண்கள் தரவரிசையில் 42 ஆவது இடத்தை பிடித்துக் கொண்டார். இதன் மூலம் இலங்கை வீராங்கனை ஒருவர் உலகளாவிய கனிஷ்ட செஸ் பிரிவின் முதல் 50 இடங்களுக்குள் நுழைந்த இலங்கையின் முதல் வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுக் கொண்டார்.

இதனிடையே, ஒஷினிக்கு செஸ் உலகில் சாதிப்பதற்கு இன்னும் ஒரு படி மட்டுமே உள்ளது. அது செஸ் விளையாட்டு கிராண்ட் மாஸ்டர் ஆகும். அவர் இந்த நாட்களில் அதற்காக தயாராகி வருகிறார். எனவே ஒஷினி கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றால் இலங்கையின் முதல் மற்றும் ஒரே கிராண்ட் மாஸ்டராக வரலாற்றில் இடம்பிடிப்பார். அதன் சிறப்பம்சம் என்னவென்றால் இன்னும் இலங்கையின் எந்தவொரு செஸ் வீரருக்கும் கூட செஸ் விளையாட்டு கிராண்ட் மாஸ்டராக முடியாமல் இருப்பதுதான்.

இதேவேளை, ஓஷினியின் பயிற்சியாளர் அனுபவம் வாய்ந்த செஸ் விளையாட்டு ஆலோசகர் அகில காவிந்த ஆவார்.