
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைத் தொடர்ந்து, நாட்டை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்காக இலங்கையின் பிரபல வர்த்தக நாமமான NOLIMIT நிறுவனம் 15 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது.இது தொடர்பான காசோலையை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (08) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.அனர்த்தம் ஒன்று ஏற்பட்ட சந்தர்ப்பத்தில், நாட்டுக்காக வர்த்தக சமூகத்தினர் இவ்வாறு முன்வருவது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும் என பிரதமர் இதன்போது தெரிவித்தார்.


