வடகிழக்கு பருவமழை ஆரம்பம் டிசம்பர் 4 முதல் மழை தீவிரம்!

அடுத்த சில நாட்களில் இலங்கையின் மேல் வடகிழக்கு பருவமழை நிலைமை படிப்படியாக ஸ்தாபிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, நாட்டின், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் காணப்படும் மழை நிலைமையானது டிசம்பர் மாதம் 04 ஆம் திகதியில் இருந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.