ACC Rising Stars Asia Cup 2025: ஓமனை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா ‘A’

ஓமன் அணிக்கு எதிரான ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்திய ஏ அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.

ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது, கத்தார் தலைநகர் தோஹாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில், இந்தியா ஏ மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது.

ஓமன் அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய ஏ அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய ஏ அணி நடப்பு ஆசிய கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.