
காஸா அமைதித் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹமாஸ் காஸா அமைதித் திட்டத்தை சீர்குலைக்க முயன்றால் கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமருக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று(14) நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


