
கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் பொலிஸாரால் தாம் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க தமது சட்டத்தரணிகளின் ஊடாக தாக்கல் செய்த எழுத்தாணை மனு மீதான விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.
குறித்த மனு மீதான விசாரணையை மீண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.


