
ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 16 ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் இன்று (08) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தினகரன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர்,சுயாதீன தொலைக்காட்சி தமிழ் பிரிவு செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, தமிழன் பத்திரிகை இணை ஆசிரியர் ஏ.எம்.ஜவ்பர்,கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான எம்.வை.எம்.சித்தீக் , காயத்ரி விக்கிமசிங்க, சிரேஷ்ட ஊடகவியலாளர்களான எம்.எஸ்.அமீர் ஹுஸைன் , ராதா மேத்தா, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் ஊடகப் பிரிவு உத்தியோகத்தர் ஜிப்ரியா இப்றாஹிம் , சுயாதீன தொலைக்காட்சி நிறுவன மக்கள் தொடர்பு முன்னாள் அதிகாரி நாலக்க ஹேமந்த அமைப்பின் பணிப்பாளர் மரியம், ஒருங்கிணைப்பாளர்களான ஏ.எஸ். அர்ஹம் சுலைமான் ஆகிப் மொஹமட் மற்றும் பெற்றோர் எனப்பலர் கலந்துகொண்டனர்.
ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகர் புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எம்.ஏ.டி.கே.பெர்னாண்டோ-கட்டானை, டி.ஏ.மிதிலா மஹேஷி-ஹொரம்பாவ ,எம்.ஆர்.உஷ்ரா- கன்னத்தோட்டை, எம்.எச்.எப்.அப்ரா-உன்னஸ்கிரிய மற்றும் எம்.எம்.எப்.மப்ரஹா-குருந்துவத்த கிந்தோட்டை ஆகியோர் புரவலரிடமிருந்து மடி கணினிகளைப் பெற்றுக்கொண்டனர்.


