
அமெரிக்காவில் உள்ளூராட்சி தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் முடிவுகள் வெளியாகி தற்போது பெரும் பேசுபொருளாக மாறி வருகின்றன. குறிப்பாக நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றிருப்பது சிறப்பாகக் கவனிக்கப்படுகிறது.அதிபர் தேர்தலுக்கு பின்னர் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்கில் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார். வயது 34. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர். இதன் மூலம் நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயராகவும், அதே நேரத்தில் மிக இளம் வயது மேயராகவும் வரலாற்றை உருவாக்கியுள்ளார்.இந்த வெற்றி, அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு ஒரு அரசியல் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


