துபாயில் ஹாலோவீன் திருவிழா… கல்லறை, சவப்பெட்டி வடிவிலான உணவு வகைகள் விற்பனை!

“துபாயில் வரும் 31-ந் தேதி ஹாலோவீன் திருவிழா வெகுவாகக் கொண்டாடப்படுகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் கல்லறை, எலும்புக்கூடு மற்றும் பேய் வடிவிலான உணவுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த திருவிழா சுமார் 1900 ஆண்டுகளுக்கு முன் மேற்கத்திய நாடுகளில் செல்டிக் அறுவடை திருவிழாவிலிருந்து வந்தது. அப்போது மக்கள் குளிர்காலம் தொடங்கும்போது இறந்தவர்கள் பேய்களாக வருவதாக நம்பினர். பேய்களை விரட்ட தந்திர முறைகள், இனிப்புகள், நெருப்பு போன்றவற்றைப் பயன்படுத்தினர்.

20-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் ஹாலோவீன் மிகவும் பிரபலமான பண்டிகையாக மாறியது. தற்போது துபாயிலும் வீடுகள் பேய் வீடுகளாக அலங்கரிக்கப்பட்டு, ஓட்டல்கள் ஹாலோவீன் கொண்டாட்டங்களை நடத்தி, மக்கள் கவரும் பேய் வடிவ உணவுகள், ஜாக் ஓ விளக்குகள் போன்றவை அமைக்கப்படுகின்றன