கஃபாலா முறையை ரத்து செய்த சவுதி அரேபியா – மகிழ்ச்சியில் தொழிலாளர்கள்!

சவுதியில் பல காலமாக அமலில் இருந்த கஃபாலா முறை நீக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.. சுமார் 70 ஆண்டுகளாகப் பல லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்திய சர்ச்சைக்குரிய இந்த முறை இப்போது நீக்கப்பட்டுள்ளது.. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் மற்றும் உரிமைகளை மேம்படுத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் முக்கியமானது சவுதி அரேபியா. எண்ணெய் வளம் மிக்க சவுதியில் பல லட்சம் வெளிநாட்டினர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். இதற்கிடையே அங்குக் கடந்த 70 ஆண்டுகளாக அமலில் இருந்த சர்ச்சைக்குரிய கஃபாலா முறை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சீர்திருத்தத்தால் சுமார் 1.3 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வருகையை ஒழுங்குபடுத்த 1950-களில் ‘கஃபாலா’ முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் ‘விஷன் 2030’ திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். கஃபாலா பதிலாகப் புதிய ஒப்பந்த முறை அறிமுகப்படுத்தப்படும்.