சம்பத் மனம்பேரிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டது.மித்தெனிய பகுதியில் போதைப்பொருள் ஐஸ் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்த சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.