
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்புறவையும் நெருக்கமான ஒத்துழைப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் (UNGA), இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.


