முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

369 இலட்சம் ரூபா அதிக வருமான வரி செலுத்தாமைக்கான காரணங்கள் இருப்பின் எழுத்துமூலம் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி நீதிமன்றில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு கொழும்பு மேலதிக நீதவான் ஓஷத மிகர மஹராச்சி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் 36,975,959 ரூபா தனிநபர் வருமான வரியை செலுத்தாமைக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக உள்நாட்டு இறைவரி திணைக்களம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் பிணை வழங்கப்பட்டுள்ள சஜின் வாஸ் குணவர்தன நீதிமன்றில் முன்னிலையாகிருந்தார்.