
நளீர் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபக தலைவர் அண்மையில் உத்தியோபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார். இதனையடுத்து மைஹோப் நிறுவன உரிமையாளரும் பிரபல தொழிலதிபருமான சித்தீக் நதீர் மற்றும் நளீர் பௌன்டேஷன் அமைப்பின் தலைவர் எம்.ஏ
நளீர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பொதுமக்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளை அமைப்பின் ஊடாக வழங்குமாறு கோரி சித்திக் நதீர் அவர்களினால் நளீர் பௌன்டேஷனுக்கு அமைப்பிற்கு நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.
இவ்நிதியின் ஊடாக நளீர் பௌன்டேஷன் தலைவரும், பிரதேச சபை உறுப்பினருமாகிய நளீர் பாடசாலை செல்லும் மாணவன் ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி ஒன்றினை வழங்கி வைத்தார்.
இவர் இப்பிரதேசத்தில் பல்வேறுபட்ட சேவைகளை செய்து வருகின்ற மையும் குறிப்பிடத்தக்கது.
(ஏ.எச்.எம்.ஹாரீஸ்)


