
கத்தாரின் அல் கறஃபா (Al Gharafa) பகுதியில் முன்னணி செல்லப்பிராணிகள் மற்றும் அலங்கார மீன்கள் விற்பனை நிறுவனமான ‘Fiora Aquatic & Pets’ தனது 3ஆவது புதிய கிளையை கடந்த ஒக்டோபர் 23 வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் திறந்து வைத்தது.
செல்லப்பிராணிகளுக்கான உணவுப் பொருட்கள், பராமரிப்பு சாதனங்கள் மற்றும் உயர்தர சேவைகளை வழங்கும் இந்நிறுவனம், ஏற்கனவே பழைய விமான நிலைய பகுதி மற்றும் பின் மஹ்மூத் ஆகியவற்றில் வெற்றிகரமாகச் செயற்பட்டு வருகிறது.
வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அல் கறஃபாவில் இப் புதிய கிளையைத் திறந்து தனது வர்த்தக நடவடிக்கைகளை நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது. இந்நிகழ்வில் வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


