கத்தாரில் பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினருக்கான செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிப் பட்டறை!

சர்வதேச தமிழ் பொறியியலாளர் மன்றத்தின் (ITEF) கத்தார் பிரிவு ஏற்பாட்டில், பெண்கள் மற்றும் 15 வயதுக்கு மேற்பட்ட இளம் தலைமுறையினருக்கான செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான பயிற்சிப் பட்டறை எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி தோஹாவில் நடைபெறவுள்ளது.

“The AI Effect – From Prompts to Possibilities” எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இப்பட்டறை, பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை Vibrant Industrial Safety Training Academy இல் இடம்பெறவுள்ளது.

ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பான நடைமுறைப் பயிற்சிகள் இதில் வழங்கப்படவுள்ளன. பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினரின் தொழில்நுட்ப அறிவையும் படைப்பாற்றலையும் மேம்படுத்துவதே இப்பட்டறையின் நோக்கமாகும்.

பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதுடன், பயிற்சி இலவசமாக நடைபெறவுள்ளது. பங்கேற்பதற்கான முன்பதிவு மற்றும் மேலதிக விபரங்களுக்கு https://qreventpass.com/events/itef-ai-workshop என்ற இணையத்தளத்தை அணுகலாம்.

மேலதிக தகவல்களுக்கு 5511 9958 அல்லது 3397 7545 என்ற தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொள்ளலாம். பங்கேற்பாளர் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளதால் முன்பதிவு அவசியமாகும்.